October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து தென்காசி கலெக்டர் ஆய்வு 

கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து தென்காசி கலெக்டர் ஆய்வு 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (01.04.2021) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் மாதம் மட்டும் ரூ.45430-அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே மூத்த குடிமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் காய்ச்சல் உள்ள அனைவரும் கண்டிப்பாக மருத்துவமனைகளைஅணுகி மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மருந்துக்கடைகளில் மருத்துவர் பரிந்துரையின்றி காய்ச்சல் மருந்து வழங்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. இரா.ஜனனி சௌந்தர்யா, இணை இயக்குநர் சுகாதார பணிகள் திரு.நெடுமாறன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் திருமதி.அருணா, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

error: Content is protected !!
Open chat