April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

‘வெற்றிவேல் வீரவேல்’, ‘நல்லா இருக்கீங்களா?’ – மதுரையில் மோடி உரை!

மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்புரையில் ‘வெற்றிவேல் வீரவேல்’, ‘நல்லா இருக்கீங்களா? என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தமிழர்கள் பண்பாட்டின் முக்கிய மையமாக விளங்குகிறது மதுரை. புண்ணிய பூமியாகவும் வீர பூமியாகவும் விளங்குகிறது. மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கும் மதுரை மண்ணுக்கு வந்தது எனது பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

தென் தமிழகத்தில் குறிப்பாக மதுரை, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான பகுதி. மதுரை வீரர் திரைப்படத்தில் எம்ஜிஆர் நடித்ததை யாராலும் மறக்க முடியுமா?

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் மதுரை – கொல்லம் போக்குவரத்து வழித்தடம் மேம்படுத்தப்பட உள்ளது. தென் தமிழகத்தின் தொழில்துறையும் வளர்ச்சி பெறும்.

மேலும் நாடு மழுவதும் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.100 லட்சம் கோடியை செலவிட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!
Open chat