January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வென்றே தீருவோம்; மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

வென்றே தீருவோம் என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது மகள் செந்தாமரையின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வென்றே தீருவோம் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

அனைவருக்கும் வணக்கம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகம் முழவதும் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், இந்த வீடியோ மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களிடம் வெளிப்படையாக சில விஷயங்களை கூற விரும்புகிறேன்.

இந்த தேர்தல் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.வுக்கு நடைபெறும் போட்டியல்ல. இது தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தம். தமிழகத்தில் நோட்டாவை விட குறைவாக வாக்குகளை வாங்கும் ஒரு கட்சி இன்று ஆளும்கட்சியை மிரட்டி மிரட்டியே தமிழகத்தின் உரிமையை மொத்தமாக பறித்துக் கொண்டிருக்கிறது.

நமது இளைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை வெளி மாநிலத்தினருக்கு தூக்கி கொடுக்கின்றனர். நீட் மாதிரியான தேர்வுகளை கொண்டு வந்து நம் பிள்ளைகளை படிக்க விடாமல் செய்கின்றனர். நமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கின்றனர்.

இதை இப்படியே விட்டு விட்டால் நம் வளங்கள், நம் மொழி, நம் சுயமரியாதை, நம் அடையாளங்கள் யாவும் சிதைந்து போய்விடும். இதை தடுக்க வேண்டுமென்றால், அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டுமென்றால் அது உங்களிடம் உள்ள ஓட்டு எனும் ஆயுதத்தால் மட்டுமே முடியும்.

தி.மு.க.வை நீங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தால் நாம் இழந்த இந்த அத்தனை உரிமைகளையும் மீட்டெடுப்போம் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!
Open chat