June 19, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

டெண்டரில் முறைகேடு செய்த வேலுமணி; அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க அமைச்சர் வேலுமணி, அவருக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் கொடுத்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ரூ.2704 கோடி மதிப்பிலான கட்டுமான பணியில் டெண்டர் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் கூறியதாவது:-

அதிமுக அமைச்சர் வேலுமணி, அவருக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் கூட்டு சதி செய்து சென்னை மாநகராட்சியில் டெண்டர் கொடுத்துள்ளார்.

மாநகராட்சி சார்பில் கட்டப்பட வேண்டிய கட்டிடங்களுக்கு ஆற்றுமணல் தட்டுப்பாடு காரணமாக எம்.சாண்ட் போடலாம் என்று நிபந்தனை கொண்டு வந்தனர். ஆனால், டெண்டர் ஆவணங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப் பட்டது.

அதற்கான பணமும் ஆற்றுமணல் வாங்கியதாகதான் போடப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உதவியோடு இந்த மாதிரி நூற்றுக்கணக்கான கோடி ஊழல் மாநகராட்சியில் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!
Open chat