October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பாவூர்சத்திரம் பகுதியில் மழையால் வாக்குச்சாவடிக்கு வர மக்கள் தயக்கம்

பாவூர்சத்திரம், கீழப்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வாக்குச்சாவடிக்கு வர தயக்கம் காட்டிவருகின்றனர்.

தென்காசி தொகுதியில் அமைந்துள்ள பாவூர்சத்திரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல ஆலங்குளம் தொகுதியில் அமைந்துள்ள கீழப்பாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பொழிகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வாக்குச்சாவடிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில் இந்த திடீர் மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 6 மணி வரையே பொது வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒரு மணி நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்யும் மழை வாக்காளர்களின் மனநிலையை குழம்பச் செய்துள்ளது.

பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை நேரத்தில் வாக்களிக்க செல்லலாம் என காத்திருந்தவர்கள், இப்போது மழை பெய்வதால் விரக்தி அடைந்துள்ளனர். எனினும் ஒரு சிலர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற குடைபிடித்தவாறு வாக்குச்சாவடிக்கு செல்வதை காண முடிகிறது. எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள நாம் இன்னும் 2 மணி நேரம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

=============

படம் கீழப்பாவூர் சென்ட்ரல் வங்கி அருகே எடுக்கப்பட்டது

You may have missed

error: Content is protected !!
Open chat