October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும்; வைகோ நம்பிக்கை!

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடக்கி விறு விறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

வாக்களித்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: –

இந்த தேர்தலில் திமுகவுக்கு மக்களிடம் பேராதரவு திரண்டிருப்பதைக் காண முடிந்தது. இந்தத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!
Open chat