April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மீண்டும் முழு ஊரடங்கா? பொதுமக்கள் அச்சம்!

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கா என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் உள்ள பொதுமக்களை இன்றுவரை வாட்டிவதைக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவலின் 2 -வது அலை வீசி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் முடிந்ததும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என பரவலான கருத்து நிலவியது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர். இருப்பினும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

error: Content is protected !!
Open chat