இனிதான் நமக்கு முக்கியத் தேர்தல் பணி இருப்பதாக மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இனிமேல்தான் நமக்கு இரட்டிப்புப் பொறுப்பும் நம் தலைக்கு மேலான முக்கியத் தேர்தல் பணியும் இருக்கிறது. ஆகவே, திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் மே 2ஆம் தேதி வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுகாத்திட வேண்டும்.
அந்த மையங்களில் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள், அங்கு பணியிலிருப்போர் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள், யாரேனும் அத்துமீறி அந்த மையங்களுக்குள் நுழைகிறார்களா என்பது பற்றி எல்லாம் தொடர்ச்சியாகக் கண்காணித்திட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் “டர்ன் டியூட்டி” அடிப்படையில் தங்களுக்குள் ஒதுக்கீடு செய்து கொண்டு, கழகத்தினரும், கூட்டணிக் கட்சியினரும் இரவு பகலாக, தொய்வின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்