April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தனியாக சென்றாலும் மாஸ்க் அவசியம்; டெல்லி கோர்ட் உத்தரவு!

காரில் தனியாக சென்றால்கூட முகக்கவசம் அவசியம் என டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதை மீறும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றம் கூறியதாவது:-

காரை தனியாக ஓட்டிச் சென்றாலும், முகக்கவசம் அணிவது கட்டாயம். மாஸ்க் சட்டம் சுரக்சா கவாச் கொரோனா பரவலை கண்டிப்பாக தடுக்கும். பொது இடம் என்பதால், காரில் ஒருவர் இருந்தாலும் கூட மாஸ்க் அணிய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளது.

error: Content is protected !!
Open chat