கொரோனா பாதிப்புக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சச்சின் டெண்டுல்கர் வீடு திரும்பினார்.
ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 27-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், டாக்டர்களின் ஆலோசனைக்கு பின்னர் கடந்த 2-ந் தேதி ஆஸ்பத்திரியில் அன்மதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். ஆனாலும் இன்னும் சில நாட்களுக்கு சச்சின் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
==================
More Stories
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!
கொரோன தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய உத்தரவு
ரஷ்யா ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய ஒப்புதல்