April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கொரோனா வரி நீக்கம்; புதுச்சேரியில் மதுபானம் விலை குறைந்தது

மதுபானம் மீதான கொரோனா வரி நீக்கப்பட்டதால் புதுச்சேரியில் மதுபானம் விலை குறைந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்டன. குறைந்த விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படும் புதுச்சேரியிலும் இந்த ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்தது. பின்னர் மத்திய அரசு தளர்வு விதிமுறைகளை வெளியிட்டதையடுத்து மே மாதம் 24-ந் தேதி மீண்டும் மதுகடைகள் திறக்கப்பட்டன. அப்போது தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்து மதுபானம் வாங்குவதை தடுப்பதற்காக மதுபானம் மீது கொரோனா வரி விதிக்கப்பட்டது. இதனால் புதுச்சேரியில் தமிழக மதுபானத்துக்கு இணையான விலை நிர்ணயிக்கப்பட்டது.

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக இந்த வரி விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அங்கு சென்று மதுபானம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. முதலில் 3 மாதங்களுக்கு மட்டுமே இந்த வரி விதிப்பு முறை அமலில் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், பின்னர் கால அளவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று முதல் புதுச்சேரியில் மதுபானம் மீதான கொரோனா வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பழைய விலையில் மதுபானம் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
=================

https://bit.ly/39RfqRU

error: Content is protected !!
Open chat