April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

“நட்புக்காக” பட பாணியில் அடுத்தடுத்து உயிரை விட்ட நண்பர்கள்

நட்புக்காக பட பாணியில் நண்பர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த  சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

நட்புக்காக திரைப்படத்தின் இறுதி சண்டைக்காட்சியில் சரத்குமார் இறப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அவருடைய உடலை கட்டியணைத்து நண்பரான விஜயகுமார் தேம்பி தேம்பி அழுவார். பின்னர் அதிர்ச்சியில் அதே இடத்தில் அவரும் உயிரிழப்பதுபோல திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

இதேபோன்ற ஒரு சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளிவாசல் அருகே வசித்து வந்தவர் மகாலிங்கம் (வயது 78). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருடைய எதிர்வீட்டில் வசித்து வந்தவர் ஜெயிலாபுதின் (66) இவர் அதே தெருவில் ரைஸ்மில் நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இந்து-முஸ்லிம் என வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்களுக்குள் எந்தவித வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். மகாலிங்கம் வீட்டில் எந்த விஷேசமும் ஜெயிலாபுதின் இல்லாமல் நடந்தது இல்லை. அதேபோல ஜெயிலாபுதின் வீட்டிலும் மகாலிங்கம் இன்றி எந்த பண்டிகைகளும் கொண்டாடப்பட்டது இல்லை.

இவ்வாறு ஒற்றுமையாக இருந்த நண்பர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி இருந்துள்ளனர். இதனால் இருவரையும் ஜெயங்கொண்டம் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கும் அடுத்தடுத்த படுக்கையிலேயே 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் திடீரென ஜெயிலாபுதின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை பார்த்ததும் பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கம், சிறுவயது முதலே தன்னுடன் சந்தோஷம், துக்கத்தை பகிர்ந்து கொண்ட நண்பன் தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டானே என அழுது புலம்பியுள்ளார். அந்த அதிர்ச்சியிலேயே அடுத்த 10 நிமிடத்தில் அவருடைய உயிரும் பிரிந்தது.
மதம் கடந்து 40 ஆண்டுகளாக தொடர்ந்த நட்பு இறப்பிலும் ஒன்று சேர்ந்துள்ளது.
====================

https://bit.ly/3wyyEpn

error: Content is protected !!
Open chat