April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

வடகொரியாவில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை- அதிபர் கிம் ஜாங் அன்

வடகொரியாவில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை- அதிபர் கிம் ஜாங் அன்

வடகொரியாவில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகில் உள்ள 200&க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியது. கிட்டத்தட்ட 2020-ம் ஆண்டு முழுவதையும் கொரோனா வைரஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

இதனை மறுத்த சர்வதேச நிபுணர்கள் பலர் சுமாரான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது நம்ப முடியாத ஒன்று என்று கூறி வருகின்றனர்.

ஆனால் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில், கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்ததாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உலக சுகாதார அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

error: Content is protected !!
Open chat