April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கொரோனா பரவல்: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தது வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 10 -ந் தேதி முதல் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் . நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது .

10.4.2021 முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகளுக்கு மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது . அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் , ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது . இந்நடைமுறைகள் 10.4.2021 முதல் அமலுக்கு வரும் . நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

 

உணவகங்களில் இரவு 11.00 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும் . கேளிக்கை விடுதிகளில்   50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பொழுதுபோக்கு பூங்காக்கள்  , பெரிய அரங்குகள் , உயிரியியல் பூங்காக்கள் , அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் அதாவது  , வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும் உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் , சமுதாயம் , அரசியல் , கல்வி , பொழுதுபோக்கு விளையாட்டு , கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும் .

தொழிற்சாலைகள் , வணிக வளாகங்கள் , தனியார் நிறுவனங்கள் , அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள் , அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும் , கை சுத்திகரிப்பான்  உபயோகப்படுத்துவதையும் , முகக் கவசம் அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து , அனுமதிக்க வேண்டும் .

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் . பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை .

காய்கறி கடைகள் , பல சரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும் , வணிக வளாகங்கள்  , அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் நகை , ஜவுளி  ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .

உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் , 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11.00 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும் .

மேற்கண்ட தகவல்கள் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!
Open chat