April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தேர்தல் அனுபவங்கள் விருப்பத்தோடு இணைந்த சமூக பணி

தேர்தல் அனுபவங்கள் விருப்பத்தோடு இணைந்த சமூக பணி

தேர்தல் வகுப்பு மூன்று நாள் அதுவும் 90 km தாண்டிய ஊரில்
சுணக்கமே இல்லாமல் சென்று வந்தோம்

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் தேர்தல் அலுவலர்கள் தேர்தலுக்கு முந்தைய நாள், தேர்தல் நாள் என இரண்டு நாட்களில் அனுபவிக்கும் துயரங்கள் எண்ணிலடங்காதவை‌.
ஆனால் இனிமையாய் செய்து முடித்துவிட்டு வந்தோம்

அந்தந்த தொகுதியிலேயே பணி செய்ய கூடாது என்பதற்காக சுமார் 90 கி.மீ தொலைவில் தேர்தல் பணிக்கு அமர்த்தி தேர்தல் நாளுக்கு முன்பாக ஒரு‌வகுப்பு , அன்றைய நாளில் வழங்கப்படும் தேர்தல் பணியிடத்தினை அறிந்து அங்கு சென்று அன்று இரவு தங்குதல் , அடுத்த நாள் தேர்தல் பணியாற்றுதல் , வாக்கு பதிவு இயந்திரங்களை தேர்தல் முடிந்த நாள் நள்ளிரவு அல்லது அதிகாலை வரை காத்திருந்து ஒப்படைத்து அந்த நேரத்தில் போக்குவரத்து வசதிகள் இன்றி காத்திருந்து வீடு திரும்புதல் என இப்பணிகளின் கடினம் மிக பெரியது.

அதுவும் அன்றிரவு பெண் பணியாளர்களின் நிலையை யாரும் கருத்தில் கொள்வதில்லை. இதற்கென சிறப்பு பேருந்துகள் கூட இயக்கப்படாது.

பெட்டி எடுத்த பிறகு நாம் அன்னியமாகிய போவோம் முதல் நாள் இரவு திருவிழா கோலத்தில் தெரியும் பள்ளி
வெறிச்சோடி கிடக்கும்

தெரியாத ஓர் குக்கிராமத்தில் ‌ஒரு வேலை உணவுக்காக யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய அவலம்தான் எப்போதும். இந்த உணவு வழங்கும் பணி யாருக்கானது ? என்பதே இதுவரை யாருக்கும் தெரியாது.

பொதுவாக ஊர் தலைவர், யாராவது கட்சி பிரமுகர் சார்பாகவே இது செய்யப்படுகிறது. ஆனால் தேர்தல் செலவினங்களில் கணக்கில் இதுவும் சேர்க்கப்பட்டிருக்கும்!

அன்றைய இரவு புது இடம் என்பதால் கண்டிப்பாக தூக்கம் இருக்காது, அதுவும் வெயில் காலம் கட்டான் தரை, கொசுகடியில், காலையில் கழிவறை குளியல் அறையில் ஏற்படும் சிரமங்கள்‌.

1000 பேர் வரை வாக்களிக்கும் மையங்களில் உணவு உண்ண கூட நேரம் இருக்காது.

தேர்தல் நாளில் கட்சி பூசல்களை சமாளித்து வாக்கு பதிவை முடித்து அன்று மாலை வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் வரை அலுவலர்களின் மனநிலையை மக்கள் யாரும் நினைத்து பார்க்க வாய்ப்பில்லை. அதிலும் குடித்துவி்ட்டு சண்டை போடும் ஞானத்தோடு வரும் கட்சி சார்ந்த அடிமட்ட தொண்டர்களுக்கு.

இத்தனையும்‌ தாண்டி இரண்டு நாட்கள் தூக்கத்தை தொலைத்து தேர்தல் பணியை முடித்து வீட்டிற்கு வரவேண்டிய நிலையில் வாகன பயணம். எத்தனை விபத்தில் முடிந்ததோ தெரியாது

இந்த முறை நான் இருசக்கர வாகனத்தில் தான் சென்றேன்.
இரவில் வரும் போது எத்தனை பயம் சொல்ல தெரியவில்லை.
ஆனால் தேர்தல் பணி முடித்த பலர் வழித்துணையாக வந்தது வரம்.

எங்கும் நிறுத்தி போன் செய்து வீட்டுக்கு சொல்ல கூட நேரம் இல்லை
அதற்குள் பத்து போன் மகளிடம் இருந்து வீட்டுக்குள் போனதும் ஓடி வந்து கட்டிக்கொண்டன
வளர்ந்த குழந்தைகள்.

சம்பளம் தராங்க ல அந்த வேலை செய்தால் என்ன என்ற ஏளனம் வேறு?
ஒருநாள் தானே செய்தால் என்ன?
உட்கார்ந்து கொண்டே சம்பளம் வாங்குறாங்க என்ற ஏளனமாக
இப்படி பேசுபவர்களை எந்த இடத்தில் வைப்பது

சிலர் BP ஏறி மருத்துவ மனையில் அனுமதி, சிலருக்கு மன உலைச்சலில் இருந்து மீள முடியா நிலை.

உங்களை போலவே நாங்களும் ஒரு குடும்பத்தின் ஆணிவேர்
அதை இழந்தால் உங்களுக்கு செய்தி
இழப்பு எங்களுக்கே

நாங்க பணி செய்ய மறுக்கவில்லை
அதிக தூரத்தில் வேண்டாம் என்கிறோம்
அவ்வளவே

அங்கே தன்னார்வளர்கள் பணி செய்தனர் அவர்கள் நிலை ரொம்ப மோசம்
எனவே,

ஆசிரியர்கள் மட்டுமல்ல
அரசு ஊழியர்கள்
காவல்துறை
மருத்துவதுறை
சமூக சேவர்கள்

அனைவருக்கும் சிரமம் தான் என்றாலும்
சமூக பணியே என கருதி
பணி செய்த அனைவருக்கும்
தேர்தல் பணியாளர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

நன்றி
வணக்கம்!

-ஜீவா ஜேக்லின்

error: Content is protected !!
Open chat