சமந்தா நடிக்கும் முதல் புராண கதை
சகுந்தலை என்ற புராண கதை திரைபடமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளில் இயக்கவுள்ளார் இயக்குனர் குணசேகர்.
இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலாவாக இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர்.
சமந்தா முதல் முதலில் புராண கதைகளில் நடிப்பதாகவும் சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் ஆர்வத்துடன் இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்