குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி முதல் திரைப்படம்
தமிழில் ஷார்ட் பிலிம்ஸ் போன்ற சிறு படங்கள் மற்றும் விளம்பரங்களிலும், நடித்து வரும் இளம் நடிகை பவித்ரா லட்சுமி
இவர் குக் வித் கோமாளி எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகை பவித்ரா, கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
கிஷோர் ராஜ்குமார் இயக்கி ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் இவர் சதீஷ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. பிரவீன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்கின்றனர்.
இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்