திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரைமுருகனுக்கு வயது 82. தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டதால் அங்கு பல்வேறு இடங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்ட துரை முருகன் தையிரியமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் இன்று எதிர்பாராதவிதமாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்