இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 685பேர் பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் 685பேர் பேர் பலியாகியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடுமுழுவதும் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 1,26,789 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த பாதிப்பு 1,29,28,574 கோடியாக அதிகரித்துள்ளது.
நோய் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 59,258 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,18,51,393 ஆகும்.
ஒரே நாளில் 685 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 1,66,862 ஆக உள்ளது.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்