சாதி மத வெறியர்களுக்கு எதிராக வருகிற ஏப்-10 ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
அரக்கோணம் அருகே சோகனூரில் இருவர் படுகொலை செய்யப்பட்டு மேலும், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் சாதி-மதவெறி கும்பலின் கொடூரம் அரங்கேறியுள்ளது.
தமிழக அரசே, பா.ம.க. சாதிவெறியர்களையும், மணல் திருட்டுக் கும்பலையும் உடனே கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்