May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா; குடும்பத்தினருடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் கொரோனாவால் உயிரிழந்தார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் பா.ஜ.க.வில் இணைந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் அவருடைய மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
==============

https://bit.ly/2Qf3CSC

error: Content is protected !!
Open chat