May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்தும் கருத்தை நீக்க வேண்டும்

தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்தும் கருத்தை நீக்கதினேஷ் ரோடி வேண்டுகோள் 

 

கோவில்பட்டியை சேர்ந்த தினேஷ் ரோடி என்பவர் பாஜக வை சேர்ந்த மதன் ரவிசந்திரனுக்கு அனுப்பிய கடித்தில் 

நேற்றைய தினத்தில் தங்களுடைய சமூகவலைதள பதிவில் தெலுங்கு மொழி பேசும் மக்களை காயப்படுத்தும் வகையில் பதிவிட்டு இருந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது

தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு பாரதியஜனதா கட்சி மட்டுமே சரியான அங்கீகாரத்தை கொடுத்து வருகிறது என்றுஉறுதியாக நம்புகிறேன்.

இந்த சூழ்நிலையில் உங்களுடைய கருத்து உங்களுடைய தனிப்பட்ட கொள்கையை வெளிப் படுத்துவதாக அமைந்தாலும் நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் அங்கம் வகிப்பதால் அது கட்சியின் கொள்கை போல வெளியில் சித்தரிக்கப்படுகிறது.

இது பாரதிய ஜனதா கட்சியை நோக்கி வந்துகொண்டிருக்கும் தெலுங்கு பேசும் சமூக மக்களை மாற்றுக் கட்சிகளுக்கு திசைதிருப்பும் செயலாக அமையும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக வேரூன்ற தெலுங்கு பேசும் நிர்வாகிகளின் அர்ப்பணிப்பும் அதிகம் என்பதை தங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

தெலுங்கு மொழி பேசும்மக்களை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்குவரமுடியாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பின்வரும்காலங்களில் இதுபோன்ற பிரிவினைவாத கருத்துக்களை விடுத்துதமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்போம். ஆகவே சமூகவலைதளத்தில் தாங்கள் இட்ட பதிவை திரும்பப்பெற வேண்டுகிறேன்.என கடித்தில் குறிபிட்டுள்ளார் 

error: Content is protected !!
Open chat