May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்

பாலியல் குற்றங்களுக்கு நிரந்தரத்தீர்வாக மரண தண்டனை விதிக்க வேண்டும்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கூலி தொழிலாளி ஒருவரின் 14 வயது மகள் தனது உறவினர்களாலும், பணி செய்யும் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் பலராலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என பல ஆண்டுகாலமாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். தமிழக மக்களும் இந்த கருத்தையே ஒருமித்த குரலில் பதிவு செய்கிறார்கள்.

தமிழகத்தின் பாரம்பரியமும், கண்ணியமும், மதிப்பும் அதன் நிலையில் இருந்து சரியாமல், சமூக சீர்கேடு அவலங்களை தடுப்பது நம் கடமை என்ற அடிப்படையில், இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தரத்தீர்வாக குற்றவாளிகளுக்கு உடனடியாக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக, வக்கிர எண்ணத்துடன் சமூகத்தில் சுற்றித்திரியும் கயவர்களிடம் இருந்து சிறுமி பாதுகாக்கப்படவும், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைத்திடவும் அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சிறுமிக்கு தொந்தரவு அளித்த குற்றவாளி எவரும் சட்டத்துக்கு விரோதமாக தப்பிவிடாதபடி அனைவரும் கைது செய்யப்பட்டு, அனைவருக்கும் தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். அந்த தண்டனையானது இனி தவறு செய்ய எவருக்கும் துணிச்சல் வராதபடி அனைவரது நெஞ்சத்திலும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக முன்னுதாரணமாக அமைய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்

error: Content is protected !!
Open chat