May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் இருப்பது தெரிந்ததும் கோவிட் பரிசோதனை செய்துகொண்டேன். அறிக்கையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நான் என்னை தனிமை படுத்திக்கொண்டேன், மருத்துவர்களின் ஆலோசனையை முழுமையாக பின்பற்றுகிறேன். மேலும் என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் தங்களுக்கான பரிசோதனையை மேற்க்கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat