May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி கொடுத்ததால் பரபரப்பு

கடலூரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி கொடுத்ததால் பரபரப்பு

புதைக்கப்பட்ட உடல் இரவு மீண்டும் தோண்டி எடுப்பு.

கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(59) இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(51) கொரோனா தொற்று ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று காலை இவர்களின் உறவினர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள வரும்போது ஆறுமுகத்தின் உறவினர்கள் ஜாகிர் உசேன் உடலையும்

ஜாகிர் உசேன் உறவினர்கள் ஆறுமுகத்தை உடலையும் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

பண்ருட்டியில் ஆறுமுகத்தின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்யும் பொழுது முகத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியுற்றனர் இதில் வேறு ஒருவரின் உடல் இருப்பதை
கண்டு பதற்றமான உறவினர்கள் மீண்டும் ஆறுமுகத்தின் உடலை எடுத்துக் கொண்டு கடலூர் மருத்துவமனைக்கு வந்தனர்

ஆனால் மருத்துவமனையில் இருந்து அவருடைய உடல் புவனகிரியில் கொரனா உயிர் இருந்த ஜாகிர் உசேன் உறவினர்கள் எடுத்துச் சென்று அவர்கள் முறைப்படி அடக்கம் செய்து தெரியவந்தது

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பண்ருட்டியிலிருந்து ஜாகிர் உசேன் உடலை எடுத்துக் கொண்டு வந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் புவனகிரி சென்று புதைக்கப்பட்ட ஆறுமுகத்தின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் ஆறுமுகத்தின் உறவினரிடம் ஒப்படைக்க ப்பட்டது

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதைக்கப்பட்ட உடலை தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதையடுத்து சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி உடலை நோண்டி எடுத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கடலூர் அரசு மருத்துவமனையில் உடல்களை மாற்றி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது

error: Content is protected !!
Open chat