May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

விவேக்கின் ஆசையை தல அஜித் நிறைவேற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனது நகைச்சுவையாலும், சமூக சீர்திருத்த கருத்துகளாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சின்னக் கலைவாணர் விவேக் இன்று காலமானார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் விசுவாசியான விவேக், தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட முடிவெடித்ததுடன், தானே களத்தில் இறங்கி இதுவரை சுமார் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டும்விட்டார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு தாராள பிரபு பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவேக்கிடம், பெரிய பிரபலங்கள் ஒருவருக்கு சவால் விட வேண்டும் என்றால் யாருக்கு உங்கள் சவால் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஒரு சில வினாடிகள் கூட தாமதிக்காமல் தல அஜித்துக்கு என்று பதில் அளித்தார். அதாவது தல அஜித் தனது ரசிகர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மரக்கன்று நட சொல்ல வேண்டும் என்பதுதான் விவேக் விட்ட சவால்.

அஜித் வாயால் கூட சொல்ல வேண்டாம். வழக்கம்போல அறிக்கை வெளியிட்டாலே போதும். அஜித்துக்காக உயிரை கொடுக்கும் ரசிகர்கள் மரக்கன்றை நடமாட்டார்களா, பொருத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.

இது பற்றிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இதனால் விவேக்கின் ஆசையை தல அஜித் நிறைவேற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
===================

https://bit.ly/3tqXs0h

 

error: Content is protected !!
Open chat