May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நண்பர் விவேக்கின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வடிவேல்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் விவேக்கின் நெருங்கிய நண்பருமான வடிவேல் மறைந்த விவேக்கிற்கு வீடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் நண்பன் விவேக் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று இன்ரூ காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அந்த செய்தியைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது. அதை பற்றி பேசவே முடியவில்லை. அவன் இல்லையே என்று நினைக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது.

பிறருக்கு உதவும் சிந்தனை அதிகம் உள்ளவர். அப்துல் கலாம் ஐயா அவர்களுடன் நல்ல நெருக்கமாக இருப்பார். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது என எவ்வளவோ நல்ல விஷயம் பண்ணுவார். எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் நான் அவருடைய ரசிகன். என்னால் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. என் நெஞ்சார்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat