January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நடிகர் மன்சூர் அலிகான் கோரிய முன்ஜாமின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சையாக பேசியதற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் மன்சூர் அலிகான்.

நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். விவேக் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டபோது மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார். அதர்க்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த அவரது முன்ஜாமீன் கோரிய மனு
தள்ளுபடி செய்யப்பட்டது.

error: Content is protected !!
Open chat