May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

ஆவின் பால் பாக்கெட்டுகளில் முறைகேடு 

ஆவின் பால் பாக்கெட்டுகளில் முறைகேடு 
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிர்வாகத்தின் சார்பில் சென்னையில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் உற்பத்தி செய்து தென் சென்னை பகுதியில் நேற்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் நேற்றைய தேதியும் (20.04.2021), நாளைய தேதியும் (21.04.2021) என இரண்டு விதமான தேதிகள் (Use By Date) அச்சிடப்பட்ட பால் பாக்கெட்டுகள் தென் சென்னை பகுதியில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
மேலும் பின் தேதியிட்டு அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பாலினை காலையில் காய்ச்சும் போதே கெட்டுப் போனதாக கூறி பால் முகவர்களிடம் பொதுமக்கள் மாற்றித் தரக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி பால் முகவர்களும் கெட்டுப் போன பாலுக்கு பதிலாக வேறு பால் பாக்கெட்டுகளை மாற்றி கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே ஆவின் பால் பாக்கெட்டுகளில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடைபெற்று, ஆவின் நிர்வாகம் ஊழலின் பிறப்பிடமாக திகழ்ந்து வந்தாலும் கூட அரசு நிறுவனம் என்பதால் ஆவின் நிர்வாகத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
ஆனால் ஆவின் நிர்வாகத்தை தமிழக அரசு முறையாக கண்காணிக்காததால் ஆவின் பால் பண்ணைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பொதுமக்களும், பால் முகவர்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
எனவே பின் தேதியிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது எப்படி..? அந்த பால் பாக்கெட்டுகளில் இருந்த பாலினை காலையில் காய்ச்சும் போதே கெட்டுப் போனது ஏன்..? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பால் முகவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.  என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்துகின்றார்.
நன்றி
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனத் தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
error: Content is protected !!
Open chat