January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியது

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சென்னையில் பாதிப்பு

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் 14 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. அதாவது தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,842 ஆகும்.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 10 லட்சத்து 51 ஆயிரத்து 487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 லட்சத்து 43 ஆயிரத்து 44 பூரண குணமடைந்துவிட்ட நிலையில், இன்னும் 95 ஆயிரத்து 48 பேர் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை-தென்காசி

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 517 பேரும், தென்காசி மாவட்டத்தில் 173 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நெல்லையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 266 ஆகவும், தென்காசியில் 10 ஆயிரத்து 478 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

உயிரிழப்பு

கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆகும். இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 512 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர்.

நெல்லையில் 227 பேரும், தென்காசியில் 169 பேரும் இதுவரை கொரோனா தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக புள்ளிவிவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

https://bit.ly/32O9ghn

error: Content is protected !!
Open chat