January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாரியம்மாளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்த நெல்லை போலீஸ் சூப்பிரண்டு

ரூ.58 ஆயிரம் பணத்துடன் சாலையில் கிடந்த மணிபர்சை போலீசிடம் எடுத்து ஒப்படைத்த மாரியம்மாளுக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிசு வழங்கி பாராட்டினார்.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் மாரியம்மாள் (வயது 19). பழைய பேப்பர், பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது சாலையில் ஒரு மணிபர்ஸ் கிடைந்ததை பார்த்த மாரியம்மாள் அதை திறந்து பார்த்தார். அதில் ரூ.58 ஆயிரம் பணம், விலையுயர்ந்த செல்போன் மற்றும் ஆதார் கார்டு இருந்தது.
அதை உடனடியாக முக்கூடல் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாள் ஒப்படைத்தார்.

இதற்காக முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் மாரியம்மாளுக்கு குத்துவிளக்கை பரிசாக வழங்கி பாராட்டினார். மேலும் அந்த மணிபர்ஸ் உரிமையாளரான சேரன்மகாதேவியை சேர்ந்த ஜாஸ்மின் நிஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாரியம்மாளின் நேர்மையை பாராட்டி அவரை இன்று நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.
================================

https://bit.ly/32EgKne

error: Content is protected !!
Open chat