January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காதலனுக்கு உருக்கமான வீடியோ அனுப்பிவிட்டு, நர்சிங் மாணவி தற்கொலை

காதலனுக்கு உருக்கமான வீடியோ அனுப்பிவிட்டு, கன்னியாகுமரியை சேர்ந்த நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிபியா (வயது 21) என்ற மகளும், எக்ஸெல் என்ற மகனும் உள்ளனர்.

நிபியா ஏர்வாடியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சிங் பயிற்சி மாணவியாக இருந்து வருகிறார். நிபியா வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் நிபியாவுக்கு வேறு சில ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் காதலனை வீடியோ காலில் அழைத்த நிபியா, தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் தூக்கு கயிறை மாட்டும் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவு செய்து அதனை காதலருக்கு அனுப்பி உள்ளார்.

இதையடுத்து தனது நண்பர்கள் மூலம் நிபியாவின் உறவினருக்கு காதலர் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்றபோது, நிபியா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வீட்டில் சோதனை செய்தபோது, கடிதம் ஒன்று சிக்கியது. அதில், என்னைப் பற்றி தெரிந்தும் காதலித்தாய். ஆனால் என்னால் மாற முடியவில்லை. நான் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள முடியவில்லை. உன்னை காதலிக்க நான் தகுதியானவள் இல்லை என்றும், என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும் எழுதியுள்ளார்.
===============================

https://bit.ly/2QXWrOT

error: Content is protected !!
Open chat