December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

”அண்ணாத்த” படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் வந்த நயன்தாரா

அண்ணாத்த படப்பிடிப்புகாக தனி விமானத்தில் ஐதராபாத் வந்து இறங்கினார் நயன்தாரா.

ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கி வருபவர் டைரக்டர் சிவா. இவர் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு படப்பிடிப்பின்போது ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதோடு, பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகியது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே ரஜினி தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றடைந்தார்.

இந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையான நயன்தாராவும் தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார்.

அவர் விமானத்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
=====================================

https://bit.ly/32Tv8bq

error: Content is protected !!
Open chat