December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

அழகில் ரோஜாவை மிஞ்சிய மகள்

செம்பருத்தி படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. இதையடுத்து சூரியன் படம் மிகவும் பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து ரஜினி உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த ரோஜா, தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தார்.

இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய ரோஜா அங்கும் தனது நடிப்பு திறமையால் வெற்றிக் கொடி நாட்டினார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து ஆந்திராவில் அரசியலில் குதித்த அவர் தற்போது, நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

இதற்கிடையே ரோஜா தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பலரும் ஷேர் செய்து வருவதுடன், அழகில் ரோஜாவை அவருடைய மகள் மிஞ்சிவிட்டார் என்றும் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
================

https://bit.ly/3xt0UtS

error: Content is protected !!
Open chat