January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சோலார் மின் தகடு மோசடி: சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை!

சோலார் மின் தகடு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சோலார் பேனல் மோசடி வழக்கு மூலம் பிரபலமானவர் கேரளத்தின் சரிதா நாயர். கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2012 ம் ஆண்டு சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் மஜீத் என்பவரிடம் மோசடியில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சரிதா நாயருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.

மற்றொரு குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், அவருக்கான தீர்ப்பு பின்னர் அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

மேலும் மூன்றாவது பிரதியான மணி மோன், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

error: Content is protected !!
Open chat