December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை முடிந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்த வீரருமான நடராஜனுக்கு இன்று முழங்கால் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

நடராஜனின் முழங்காலில் வலி ஏற்பட்டதால் பிசிசிஐ மருத்துவக் குழுவினர் அவருக்கு முழங்காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறிய நடராஜன்:-

இன்று நான் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என்னைக் கனிவுடன் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. பிசிசிஐ அமைப்புக்கும், நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!
Open chat