December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு; தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும்?

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதில் மேற்குவங்காளத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடந்தது. இந்த நிலையில், இன்று மேற்குவங்காளத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

தேர்தல் முடிவடைந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகியது.

அதில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியைக் யார் கைப்பற்றுவார் என்பது குறித்த வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் வெளியானது. ரிபப்ளிக் சி.என்.எக்ஸ், இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் வரை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டன.

இதில் பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

* ரிபப்ளிக் சி.என்.எக்ஸ்: கருத்து கணிப்பு: அ.தி.மு.க., கூட்டணி 56 – 58 இடங்களிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 இடங்களிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று வெளியிட்டுள்ளது.

* பி- மார்க் கருத்து கணிப்பு அ.தி.மு.க., கூட்டணி 58 – 68 இடங்களிலும்,, தி.மு.க, கூட்டணி 165- 190 இடங்களிலும், மற்றவை 12 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கிறது.

* டுடேய்ஸ் சாணக்கியா: அ.தி.மு.க, கூட்டணி 46- 68 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி 164-182 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

* இந்தியா அஹெட் கருத்து கணிப்பு தி.மு.க., கூட்டணி 165 – 190 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 40 – 65 இடங்களிலும், மற்றவை 13 இடங்களிலும் வெற்றி பெறும் என்று வெளியிட்டுள்ளது.

* சி வோட்டர்ஸ் தி.மு.க, கூட்டணி 160 -172 தொகுதிகளிலும், அ.தி.மு.க, கூட்டணி 58 – 70 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

* ரிபப்ளிக் வேல்டு தி.மு.க. கூட்டணி 170, அ.தி.மு.க. கூட்டணி 68, அ.ம.மு.க. 6, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என தெரிவித்துள்ளது.

* டைம்ஸ் நடத்திய கணிப்பிலும் தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் இடையே இழுபறி நிலவும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அசாமில் மீண்டும் பா.ஜ.க.வும், கேரளாவில் மீண்டும் இடதுசாரி கட்சியும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

* புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

5 மாநிலங்களிலும் எந்த கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள், வெற்றி பெறும் என்று கூறப்பட்ட கட்சிகளின் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், தோல்வி அடையும் என்று கூறப்பட்ட கட்சிகளின் தொண்டர்களுக்கு சோகத்தையும் அளித்துள்ளது. எது எப்படியோ உண்மையான நிலவரம் தெரிய இன்னும் 3 நாட்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

===================

https://bit.ly/3xyYk5B

error: Content is protected !!
Open chat