May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

அதிமுக சார்பில் ‘மே தின’ வாழ்த்து

அதிமுக சார்பில் ‘மே தின’ வாழ்த்து

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம்,

அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி

ஆகியோரின் ‘மே தின’ வாழ்த்துச் செய்தி

உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த ‘மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். உழைப்பாளர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்து, ஓயாது போராடிய தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும்; உடல் உழைப்பின்

அத்தியாவசியத்தையும்; அதன் மேன்மை மிக்க சிறப்பினையும் உலகத்தார்க்கு உணர்த்துகின்ற திருநாளாகவும் மே தின திருநாள் விளங்குகிறது. உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்நாள், நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாகக் கொண்டாடப்படுகிறது. ‘உழைக்கும் கைகளே உலகை உருவாக்கும் கைகள்’ என்று உலகம் உணர்ந்த இந்தத் திருநாளில், தங்களது தளர்வறியா உழைப்பின் மூலம் தமிழகத்தை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் எங்களது உளமார்ந்த ‘மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம். என்று அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.

error: Content is protected !!
Open chat