May 19, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நந்திகிராம் தொகுதியில் மம்தா திடீர் தோல்வி..?

நந்திகிராம் தொகுதியில் மம்தா திடீர் தோல்வி..?

மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.

மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மமதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மம்தா முதலில் 1200 வாக்குகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேட்டி அளித்த மமதா பானர்ஜி, நந்திகிராம் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் நான் மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்பேன்.

நந்திகிராமை குறித்து கவலைப்பட வேண்டாம். நான் நந்திகிராம் தோல்வி அடைய காரணம் உள்ளது.

நான் மிகப்பெரிய அமைப்பை எதிர்த்து போட்டியிட்டேன். நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பு அளிக்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கவலை இல்லை.

நாங்கள் 221 இடங்களில் வெல்கிறோம். பாஜக தேர்தலிலேயே தோல்வி அடைந்துவிட்டது.

தேர்தல் ஆணையம் கடைசியில் முடிவை மாற்றிவிட்டது. நான் வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டு பின் முடிவை மாற்றிவிட்டது.

நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பேன். தேர்தல் ஆணையத்தின் செயல் தவறானது. தேர்தல் ஆணையம் இப்படி செயல்பட கூடாது. தேர்தல் ஆணையத்தின் கொடுமைகளை நாங்கள் எதிர்கொண்டோம். பாஜக தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டது. இப்போது கீழ்த்தரமான அரசியலை அந்த கட்சி செய்கிறது.

எங்களுக்கு வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கொரோனாவிற்கு எதிராக பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முழு கவனத்தை செலுத்துவேன், பதவி ஏற்பு விழா சிறிய அளவில் மட்டுமே நடக்கும், என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat