January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரையிலான 14 நாட்கள் முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால், வருமுன் காப்போம் என்ற பாணியில் முன்கூட்டியே தேவையான மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள மதுபிரியர்கள் தொடங்கிவிட்டனர்.. இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுபிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.

டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை செயல்பட்டது. மதுபிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்து தேவையான மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நேற்று களைகட்டியது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 426.24 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில், சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 100.43 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. திருச்சி மண்டலத்தில் 82.59 கோடி ரூபாய், மதுரையில் 87.20 கோடி ரூபாய், சேலத்தில் 79.82 கோடி ரூபாய், கோவையில் 76.12 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

426 கோடி ரூபாய் என்ற இந்த இலக்கை இன்று மதுப்பிரியர்கள் முறியடிப்பார்கள் என்றுதான் கூற வேண்டும். இன்று காலை முதலே கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதுபோக இன்றுதான் டாஸ்மாக் கடை இயங்கும் கடைசி நாள் என்பதால், நேற்றைவிட இன்று கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

https://bit.ly/3o2ImMU

error: Content is protected !!
Open chat