January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முழு ஊரடங்கால் டாஸ்மாக்கின் 2 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், டாஸ்மாக் கடைகள் இயங்காது என்ற அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினமும், நேற்றும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்களில் பலர் 2 வாரத்துக்கு தேவையான மதுபானத்தையும் வாங்கி இருப்பு வைக்கும் அளவுக்கு மொத்தமாக வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது.

அந்தவகையில், நேற்று முன்தினம் மட்டும் ரூ.426.24 கோடிக்கு மது விற்பனை ஆனது. நேற்றைய விற்பனை முந்தைய நாள் வசூலை மிஞ்சியது. தமிழகம் முழுவதும் 428.69 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. இந்த 2 தினங்களில் மட்டும் ரூ.854 கோடியே 93 லட்சத்துக்கு விற்பனை ஆகி இருக்கிறது.

 

https://bit.ly/3uDCooa

error: Content is protected !!
Open chat