January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

பாவூர்சத்திரத்தில் யூனியன் அலுவலகத்தில் வைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் ஆலங்குளம் தாசில்தார் பட்ட முத்து, வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர் பார்த்தசாரதி, வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜநயினார், பாலசுப்பிர மணியன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி பாவூர்சத்திரம் பகுதிகளில் டீக்கடைகள், காய்கறி கடைகள், காய்கறி மார்க்கெட், மற்றும் ஹோட்டல்கள் இயங்குவதாக தென்காசி மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரின் பேரில் இன்று (மே 13- வியாழக்கிழமை) முதல் தடுப்பு நடவடிக்கைகளை மீறும் கடைகளுக்கு ரூ. 200, ரூ. 500 முதல் 5000 வரையும், அதையும் மீறினால் கடைகள் சீல் வைப்பதற்கும் அறிவுறுத்தப் பட்டது.

error: Content is protected !!
Open chat