January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மீண்டும் மோடி அரசை சீண்டிய ஓவியா

தமிழில் களவாணி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். இந்த நிலையில் கடந்த சில காலங்களாகவே அவர் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துகளை அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.

தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் #GoBackModi ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகும். அப்போது ஓவியாவும் இந்த ஹேஷ்டேக்கை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனால் அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் பல இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் ”மோடி ஜி எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தீர்கள்” என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது.

இதையடுத்து இந்த போஸ்டர் விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது. அதில் பெரும்பாலானவர்கள் போஸ்டர் ஒட்டும் கூலித்தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. கைதானவர்களுக்கு ஆதரவாக டுவிட்டரில் #ArrestMeToo (என்னையும் கைது செய்யுங்கள்) என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.

நடிகை ஓவியாவும் இது ஜனநாயகம்தானா? என கேள்வி எழுப்பியதோடு அந்த ஹேஷ்டேக்கையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் என்னையும் கைது செய்யுங்கள் என்று மீண்டும் மோடி அரசை நடிகை ஓவியா சீண்டியுள்ளார்.

 

error: Content is protected !!
Open chat