January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஜிம் உடையில் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் 2016-ம் ஆண்டு நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். 2018-ம் ஆண்டு “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர்.  அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர்.

அந்த படத்தில் நாட்டியம் ஆடுவது போல தொடங்கும் ‘இங்கெம், இங்கெம், இங்கெம் கவலே’ பாடல் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் ராஷ்மிகா மந்தனாவை கொண்டு சேர்த்தது.

தமிழில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் விஜயின் பிகில் படத்தில் இவர் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆசை நிறைவேறியது. அதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகிறது. இணையத்தளத்தில் இவரால் வெளியிடப்படும் இவரது புகைப்படங்கள் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

அந்த வகையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அணியும் உடையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் இணைக்கப்பட்டு, அதில் (Left or Right) இடது பக்க புகைப்படம் பிடித்து இருக்கிறதா, வலது பக்க புகைப்படம் பிடித்து இருக்கிறது என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுப்பப்பட்டுள்ளது.

ரசிகர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிலர் உங்களுக்கு இந்த உடையை விட சேலை தான் அழகு எனவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Open chat