January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

தென்காசியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் கோவிட் 19 பெருந்தொற்று 2-ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த கோவிட் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களை நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்ற மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் 17.05.2021 அன்று சேர்ந்தமரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கொரோனா சிறப்பு முகாமில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா ஆகியோர் பார்வையிட்டார்கள். இச்சிறப்பு முகாமில் 223 பயனாளிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
18.05.2021 இன்று புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட பேரூந்து நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு கொரோனா முகாமினை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் அவர்கள் பார்வையிட்டார்கள். இம்முகாமில் 159 பயனாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.


இது போன்று மாவட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசியினை செலுத்தி நோய்த்தொற்றிலிருந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!
Open chat