January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; காயத்ரி ரகுராம்

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுடன் கொரோனா ஆலோசனை கூட்டம் நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, முதல்வர் மு.கஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஆட்சி அதிகாரத்துக்கு வந்த 10 நாட்களில் மாவட்ட கலெக்டரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் கட்டாயப்படுத்தி தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கொரோனா ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அதிகார துஷ்பிரயோகம் செய்து தவறான முன்னுதாரணம் ஏற்படுத்திய இவரை தமிழக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://bit.ly/3f1slUk

 

error: Content is protected !!
Open chat