January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நயன்தாரா தடுப்பூசி போட்ட விவகாரம்; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

சென்னையில் உள்ள குமரன் மருத்துவமனையில் நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் முதல் தவணை கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், நடிகை நயன்தாராவுக்கு தடுப்பூசி செலுத்தும் படத்தில் செவிலியரின் விரல்கள் மட்டுமே தெரிகிறது. தடுப்பூசி தெரியவில்லை என்ற சர்ச்சைகள் கிளம்பியது. இந்த புகைப்படம் தொடர்பாக, நயன்தாரா தடுப்பூசி போட்டாரா? இல்லையா? என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் பலர் சமூக வலைதளங்களில் வேடிக்கையாக சித்தரித்து வைரலாக்கி வந்தனர்.
இது குறித்து நயன்தாரா தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் செவிலியர் கையில் ஊசி இருந்தது என கூறப்பட்டது. இந்த நிலையில் அதனை உண்மை என உணர்த்தும் வகையில் தற்போது வேறு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் செவிலியர் கையில் தடுப்பூசி இருப்பது தெரிகிறது. இதனால் 2 நாட்களாக இணையத்தில் உலா வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

https://bit.ly/3v3Wfgn

error: Content is protected !!
Open chat