January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாயை வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கு, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வழங்கியுள்ளார். இதற்காக பொன்னம்பலம் நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

பொன்னம்பலம் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். நடிகர் கமலும், நிதியுதவி வழங்கினர். அஜித்குமாரும் உதவி செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியும் பண உதவி வழங்கியது பொன்னம்பலம் வெளியிட்ட வீடியோ மூலம்தான் தெரியவந்துள்ளது.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில்… அண்ணன் சிரஞ்சீவி அவர்களுக்கு வணக்கம்! ரொம்ப நன்றி அண்ணா, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நீங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாய் மிகவும் உதவியாக இருந்தது. உயிருள்ளவரை உங்களை மறக்க மாட்டேன். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஆண்டவர் உங்களை எப்போதுமே உங்கள் பெயர் கொண்ட ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக உங்களை வைத்திருப்பார். ஜெய்ஸ்ரீராம், நன்றி’ என்று கூறியுள்ளார்.

நீங்களும் அந்த வீடியோவை பார்க்க வேண்டுமா இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்…. https://bit.ly/3fHbvt9

error: Content is protected !!
Open chat