December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நாட்டார்மங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

நாட்டார்மங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு தடுக்கும் முயற்சி எடுத்து வருகிறது. மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்
ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டார்மங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளிஞ்சிங் பவுடர் தூவும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சுதா மணிரத்னம் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டார ஊராட்சி அலுவலர் சுகுமார், ஊராட்சி செயலாளர் பாலமுருகன் மற்றும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி

செய்தியாளர் வெ.விஜயகுமார் காட்டுமன்னார் கோயில்

error: Content is protected !!
Open chat