December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஜூன் 1 வரை சிறப்பு ரயில்கள் ரத்து 

ஜூன் 1 வரை சிறப்பு ரயில்கள் ரத்து 

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக சில ரயில்கள் ஜூன் 1 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரயில்களின் சேவை மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிப்பு செய்யப்படுகிறது

மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06191 தாம்பரம் – நாகர்கோயில் சிறப்பு ரயில் ஜூன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல ஜூன் 1 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06192 நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் ஜூன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06791 திருநெல்வேலி – பாலக்காடு சிறப்பு ரயில் ஜூன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல ஜூன் 1 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06792 பாலக்காடு – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜூன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மங்களூரு, கொச்சுவேலி – மைசூரு, திருவனந்தபுரம் – மங்களூரு, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவை ஜூன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது

error: Content is protected !!
Open chat